Tuesday, January 3, 2012

13-வது ஆண்டு நிறைவு விழா

எல்லா ஆண்டுகளை போல் இல்லாமல் கடந்த ஆண்டுகளை விட மேலும் மேலும் மெருகேறி புது பொலிவுடன் இந்த ஆண்டு கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்டு நிறைவு விழா இனிதே நடந்தேறியது. 

இந்த ஆண்டு மூன்று நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடந்தன கடைசி நாளில் பொதுக் கூட்டமும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.  30-12-2011 அன்று காலையில் துவங்கிய கைப்பந்து போட்டியானது மாலை ஐந்து மணிக்கு முடிவடைந்தது. இந்த போட்டியில் பன்னிரண்டு அணிகள் பங்கேற்றன இதில் முதல் பரிசை திருவிதாங்கோடு அணியும் இரண்டாம் பரிசை வெள்ளிகோடு அணியும் பரிசுகளை வென்றன.    31-12-2011காலை ஏழு மணிக்கு கொற்றிகோடு சி எஸ் ஐ ஆலயத்தின் முன்பு அணையா விளக்கு ஒட்டம் துவங்கியது. இந்த அணையா விளக்கு ஓட்டத்தை பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் புஷ்ப லீலா ஆல்பன் அவர்கள் துவங்கி வைத்தார்கள் இந்த ஓட்டமானது குமாரபுரம், சித்திரங்கோடு, வேர்கிளம்பி , மேக்காமண்டபம் , முட்டைகாடு வழியாக மைதானத்தை வந்து அடைந்தது. பின்னர் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது இதில் குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. 
  1-1-2012  காலை ஏழு மணிக்கு பெருஞ்சிலம்பு முதல் கொற்றிகோடு வரையிலான மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்ட பந்தயம் , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது. 
சிறப்பு போட்டியாக வழுக்கு மரம் ஏறுதல் போட்டி நடைபெற்றது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டியானது பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இருந்தது அனைவரும் கைகளை தட்டி வீரர்களை உற்சாக படுத்தியது ரசிக்கும் விதமாக இருந்தது. 
திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்குமான  வடம் இழுத்தல் போட்டி நடைபெற்றது இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதும் விதமாக போட்டி மிகவும் திரில்லாக நடைபெற்றது கடைசியில் திருமணம் ஆனவர்கள் வெற்றி பெற்றார்கள்.   

மாலை  பொதுக்கூட்டமும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகளும் பரிசு வழங்கலும்நடைபெற்றது. இரவு திரை இன்னிசை விருந்தோடு இனிதே முடிந்தது. விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. 

இந்த  ஆண்டின் சிறப்பு என்னவென்றால் பொதுக் கூட்டத்தின் போது எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு பொது மக்கள் வந்திருந்தார்கள். சிறுவர்கள் அதாவது நாளைய இயக்கத்தின் தூண்கள் மிகவும் சுறு சுறுப்பாக பணியாற்றினார்கள்.

பதிமூன்று ஆண்டுகள் அல்ல நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் பரவலாக பேசினார்கள். சிறந்த நிர்வாகத்தை இளைஞர்களால கொடுக்க முடியும் என்பதற்கு சாட்சி தான் இந்த இயக்கம்.

   

Thursday, January 27, 2011

குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி

கிளப் சார்பாக குடியரசு தின கொடியேற்றும் நிகழ்ச்சி கொற்றிகோடு சி எஸ் ஐ தேவாலயத்திற்கு முன் நடை பெற்றது . இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காசி நாடார் அவர்கள் கொடியேற்றி வைத்தார்கள் . 

குடியரசு தினத்தை நினைவு படுத்தும் விதமாக கிளப் சார்பாக தேசிய கொடியேற்ற தீர்மானித்து அதன் அடிப்படையில் தற்காலிக கொடி கம்பம் கொற்றிகொட்டில் நிறுவ பட்டது . சரியாக காலை 6.30 மணியளவில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காசி நாடார் அவர்கள் ராணுவ உடையுடன் வந்து தேசிய கொடியேற்றினார் . பின்னர் அவருடன் சேர்ந்து அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர் . 

கிளப் சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை நினைவு படுத்தினார்கள் . 

Saturday, January 1, 2011

கிளப்பின் 12 வது ஆண்டு விழா குறித்த செய்திகள்

நேற்று (31-12-2010)துவங்கிய கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இன்றும்(01-01-2011) தொடர்ந்தும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது பற்றிய செய்திகள் கொற்றிகோடு இணையதளத்தில் பதிவிட செய்ய பட்டுள்ளது.   

இதை பற்றி பார்க்க கீழ் கண்ட இணைப்புகளில் பார்க்கலாம். 



ஆண்டு விழா புகைப்படங்களை பார்வையிட இங்கே செல்லவும் 

Sunday, December 12, 2010

ஆறு ஓவர் மட்டை பந்து போட்டி (Super six cricket) மிகவும் சிறப்பாக நடை பற்றது .

இந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளில் ஒன்றான ஆறு ஓவர் மட்டை பந்து போட்டி இன்று காலை 10 மணியளவில் கொற்றிகோடு பழைய கோயில் மைதானத்தில் வைத்து மிகவும் சிறப்பாக நடை பெற்றது .

கடும் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டகிரிக்கெட் போட்டியானது இன்று மழை நின்று விட்டதால் நடை பெற்றது . ஏற்கனவே கிளப் உறுப்பினர்கள் மற்ற அணிகளுக்கு முறையாக தகவல் கொடுத்து போட்டிகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்தனர் . நேற்று முன்தினம் சுவரொட்டிகள் மூலம் இந்த போட்டிக்கான விளம்பரங்கள் செய்ய பட்டது . இதற்கான சுவரொட்டி செலவை முட்டை காடு விஜி அன் கோ உரிமையாளர் விஜி ஏற்று கொண்டார் அதற்காக அவருக்கு கிளப் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .


இன்றைய போட்டியில் 24 அணிகள கலந்து கொண்டன  இதில் 12 அணிகள் தேர்வு செய்ய பட்டு அடுத்த வாரம் தேர்வு செய்ய பட்ட அணிகளுக்கு விளையாட்டு போட்டி நடை பெறும். இந்த போட்டிகளுக்கான பரிசு தொகையும் கோப்பையும் ஆண்டு நிறைவு விழா நடைபெறும் 01-01-11 அன்று பொதுக்கூட்டத்தின் பொது வழங்க படும் . 

கபடி போட்டி : 31-12-10 காலை 8 மணிக்கு

Thursday, November 4, 2010

உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

எந்த ஒரு இயக்கமும் தன்னிச்சையாக செயல் படுவது என்பது வளர்ச்சிக்கு உதவாது ஒரே சிந்தனை என்றுமே ஆரோக்கியமானதாக இருக்காது. அதற்கு விதி விலக்கு அல்ல. இயக்க உறுப்பினர்கள் ஒவ்வேருவரின் ஆலோசனைகளை தவறாது வாங்கி செயல் பட்ட இயக்கம் இப்போது அனைவருடைய கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கிறது.

ஆரோக்கியமான உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன. உங்கள் மேலான கருத்துக்களை ஒவ்வெரு பதிவிலும் கருத்துக்கள் பகுதியில் பதியலாம். இல்லையென்றால் luckystar@kotticode.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

 
Free Host | lasik surgery new york | cpa website solutions